Friday, August 21, 2015

இலவசமாக இணையதளம் அமைப்பது எப்படி?

இணையதளம் அமைப்பது மிக எளிது, அதற்கு கூகிள் நிறுவனத்தின் பிளாக்கர் இலவசமாக இணையதளம் அமைக்க உதவுகிறது.  நீங்கள் கூகுளின் மின்னஞ்சல்(ஜிமெயில்) சேவையை பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி புதிய வெப்சைட் உருவாக்கி விடலாம்.

உங்கள் ஜிமெயில்-ஐ சேவைக்குள் நுழைந்த பிறகு, இங்கெ கிளிக் செய்யவும். அங்கு திரையில் வரும் படிகளை பூர்த்தி செய்த பிறகு, ப்ளாக்கரின் முகப்பு பக்கத்தை அடைவீர்கள்.



படத்தில் காண்பிக்க பட்டுள்ளது  போல "நியூ ப்ளாக்" எனும் பட்டனை கிளிக் செய்யவும்.  உங்கள் இனைய தளத்தின் தலைப்பு மற்றும் இணயதள முகவரியை அடுத்து வரும் பக்கத்தில் எழுதவும். இறுதியில் கிரியேட் பிளாக் எனும் பட்டனை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்கள் இணையதளம் உருவாகிவிட்டது.


இப்போது நீங்கள் உங்கள் தகவல்களை எழுத தொடங்கலாம். நியூ போஸ்ட் எனும் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
மேலே உள்ள படத்தில்  குறிப்பிட்டது போல தொடரவும். உங்கள் உரையின் தலைப்பு மற்றும் கருத்துக்களை பதிவு செய்த பிறகு "பப்ளிஷ்" எனும் பட்டனை கிளிக் செய்யவும்.

இப்பொழுது உங்களுக்கான இணையத்தளம் தொடங்கப்பட்டு தகவல் பதிவும் தொடங்கியது. இப்பொழுது மகிழ்ச்சிதானே!

No comments:

Post a Comment